About Our Organization

நோக்கம்/ இலக்கு

கிளிநொச்சி விசேட தேவைகளுக்கு உட்பட்டோர் வலையமைப்பு

பெற்றோரினால் பராமரிக்க முடியாமல் எமக்காக யாரும் இல்லை என்ற ஆதங்கத்துடன் இருக்கும் பிள்ளைகளிற்கு அவர்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலமும் பராமரிப்பதன் மூலமும் “நாம் இருக்கிறோம்” என்ற நம்பிக்கையை ஊட்டுவதனூடாக அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை, எதிர்கால நம்பிக்கையை ஊட்டுதலும் மேம்படுத்தலும்.

Registration and ticketing made easy

Join the community to give education for children

கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோருக்கான வலையமப்பு

 

எமது நிறுவனமானது 17.01.2015 திகதியன்று ஆளுநர் சபை உறுப்பினர்களின் தெரிவோடு ஸ்தாபிக்கப்பட்டு 04.02.2015ம் திகதியன்று சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாய் தகப்பனை இழந்த, பொருளாதார வசதியற்று, பராமரிப்பு உதவியான விசேட தேவைகுட்பட்ட பிள்ளைகளை கௌரவ நீதிமன்றின் அனுமதியின்படி எமது நிறுவனத்தில் இணைத்து வருகின்றோம். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இயங்கி வந்த எமது நிறுவனத்திற்கு கரைச்சி பிரதேச செயலகத்தின் செயலாளராக இருந்த திரு.த.முகுந்தன் அவர்களினால் மலையாளபுரத்தில் சிறுவர் இல்லம் அமைப்பதற்குரிய காளி 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது. 2018 இன் இறுதிப்ப குதியில் எமது நிறுவனத்திற்கு விஜயம் செய்த திரு.S.கேதீஸ்வரன் (கனடா)  அவர்கள் எமது நிறுவனத்தின் நிலையை உணர்ந்து திரு.S.கேதீஸ்வரன் அவர்களும் அவரது நண்பருமான திரு.T.இராமகிருஷ்ணன் (கனடா) அவர்களும் இணைந்து 64 லட்சம் பெறுமதியான கட்டிடத்தை அமைத்து தந்தார்கள். 30.08.2019ம் திகதியன்று நிறுவனத்திற்கு சொந்தமான புதுக் கட்டிடத்தை எமது சிறுவர் இல்லம், நிறுவனத்தின் காரியாலயம் என்பன இயங்கத் தொடங்கின. அவ்வேளை எமது பிள்ளைகளின் தேவையை உணர்ந்து திரு.திருமதி.முருகவேல் சாந்தகுமாரி மற்றும், மயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம் அவர்களினால், சமையற் கூடமும் Mr.Subraaniyam and Mrs சிவக்கொழுந்து அவர்களினால் உணவு அருந்தும் அறையும், T.இராமகிருஸ்ணன் அவர்களினால் இயனமருந்து கூடமும் கட்டப்பட்டு எமக்கு வழங்கப்பட்டது.

Fundraising

There are endless ways that you can raise funds to support children in desperate need
Read More

Donation

Your charity donation helps create positive change that children need right now.
Read More

Events

Find out more about our charity fundraising events and how you can get involved.
Read More
Fundraising experience for your donors

Helping each other can make world better

There are many ways you can get involved in KSSN. life-changing work and do your part for children around the world.

0